பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.35½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்


பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.35½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x

அம்மாபேட்டை அருேக உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.35½ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.35½ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கொங்கணாபுரம், தேவூர், எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர், அந்தியூர், அம்மாபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1,480 மூட்டைகளில் பி.டி. ரக பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

ஏலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் நடந்தது.

ரூ.35½ லட்சம்

இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 502-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 399-க்கும் என மொத்தம் ரூ.35 லட்சத்து 55 ஆயிரத்து 318-க்கு ஏலம் போனது.

பெருந்துறை, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், கோவை, கொங்கணாபுரம், அந்தியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து பருத்தியை ஏலத்தில் எடுத்து சென்றனர்.


Related Tags :
Next Story