சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா்

ஈரோடு

சென்னிமலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 15-வது வார்டு உறுப்பினர் ஒருவரை தவிர மற்ற 14 வார்டு உறுப்பினர்களும் தி.மு.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். சென்னிமலை பேரூராட்சியில் நேற்று முன்தினம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கடந்த 26-7-2023 அன்று இரு சக்கர வாகன நிறுத்துமிடம் குறித்த ஏலத்திற்கு அங்கீகாரம் செய்து கொடுக்கப்பட்டது. அந்த அங்கீகாரத்துக்கு இதுவரை பேரூராட்சி செயல் அலுவலர் சம்பந்தப்பட்ட குத்தகைதாரருக்கு உத்தரவு நகல் தரவில்லை எனக்கூறி நேற்று மாலை 6 மணி முதல் கவுன்சிலர்கள் குமார், திலகவதி, தீபா ஆனந்த், நஞ்சப்பன், தெய்வசிகாமணி, சுப்பிரமணி, ஹேமலதா, ஜெயமணி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் நேரில் வந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் கவுன்சிலர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு சென்னிமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

1 More update

Related Tags :
Next Story