சென்னிமலை முருகன் கோவிலில் ஒரே நாளில் 17 திருமணங்கள்மணமக்களின் உறவினர்கள் குவிந்தனர்


சென்னிமலை முருகன் கோவிலில் ஒரே நாளில் 17 திருமணங்கள்மணமக்களின் உறவினர்கள் குவிந்தனர்
x

சென்னிமலை முருகன் கோவிலில் ஒரே நாளில் 17 திருமணங்கள் நடந்தன. இதனால் மணமக்களின் உறவினர்கள் குவிந்தனர்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு செல்வர். மேலும் இந்த கோவிலில் திருமணங்களும் நடைபெறும்.

இந்த நிலையில் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்தது. நேற்று ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று ஒரே நாளில் 17 திருமணங்கள் நடைபெற்றது. மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கோவிலுக்கு வந்ததால் சென்னிமலை முருகன் கோவில் வளாகம் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும் கோவில் வளாகத்தில் நாதஸ்வர தவில் இசை சத்தத்தையும் அதிகமாக கேட்க முடிந்தது.

1 More update

Related Tags :
Next Story