கலெக்டர் அலுவலகத்தில், தாட்கோ அலுவலகம்
கலெக்டர் அலுவலகத்தில், தாட்கோ அலுவலகத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
திருப்பத்தூர்
புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக 5-வது தளம் ஏ-பிளாக்கில் அமைந்துள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் கலெக்டர் அமர் குஷ்வாஹா குத்து விளக்கேற்றி வைத்து பேசினார்.
அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகத்தை அணுகி, செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார்.
நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட தாட்கோ மேலாளர் பிரேமா, திருப்பத்தூர் மாவட்ட தாட்கோ மேலாளர் பொறுப்பு அமுதாராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story