ஈ.வே.அ.வள்ளிமுத்து தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.5 லட்சம் நிதி
ஈ.வே.அ.வள்ளிமுத்து தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் ரூ.5 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேலாயுதபுரம் ஈ.வே.அ. வள்ளிமுத்து தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் தொழில்வர்த்தக சங்க தலைவர் வி. என். பி. ஆர். ஏ. பிரபாகரன் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை மேலாளர் சுரேஷ் சேசுபாதம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை பள்ளி செயலாளர் வேல்முருகேசனிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி குழு தலைவர் சண்முகராஜ், நாடார் உறவின்முறை சங்க செயலாளர் வள்ளியப்பராஜ், உறுப்பினர் சேர்மச்சாமி, பள்ளி தலைமை ஆசிரியர் துரை, முன்னாள் தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story