ஈரோட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்


ஈரோட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
x

ஈரோட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஈரோடு

ஈரோட்டில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள், மார்பக புற்றுநோய் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் தொடங்கிய ஊர்வலம், பெருந்துறை ரோடு, கலெக்டர் அலுவலகம், தியாகி குமரன் ரோடு வழியாக சென்று சம்பத் நகரில் நிறைவுபெற்றது. அதைத்தொடர்ந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.


Related Tags :
Next Story