ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் போராட்டம்
போராட்டம்
மாநகராட்சிகளில் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக வெளியிடப்பட்ட 152-வது எண் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். வெளிக்கொணர்வு முகமை மூலம் ஒப்பந்த பணியாளர்களாக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். சுய உதவிக்குழு, ஒப்பந்தம் அடிப்படையில் வேலை செய்யும் துய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், டிரைவர்கள் உள்ளிட்டோரை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தார்.
இதில் உள்ளாட்சி துறை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.