ஈரோடு மார்க்கெட்டில் பச்சை மிளகாய் கிலோ ரூ.120-க்கு விற்பனை


ஈரோடு மார்க்கெட்டில் பச்சை மிளகாய் கிலோ ரூ.120-க்கு விற்பனை
x

ஈரோடு மார்க்கெட்டில் பச்சை மிளகாய் கிலோ ரூ.120-க்கு விற்பனையானது.

ஈரோடு மார்க்கெட்டில் பச்சை மிளகாய் கிலோ ரூ.120-க்கு விற்பனை ஆனது. தக்காளி கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.100-க்கு விற்றது.

பச்சை மிளகாய்

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக காய்கறிகள் வரத்து குறைந்து விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

குறிப்பாக தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.20 விலை குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை ஆனது.

தக்காளி விலை உச்சத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள் தக்காளியின் பயன்பாட்டை குறைத்துவிட்டனர். தக்காளி சாதம், தக்காளி சட்டினி போன்றவற்றை தற்போது வீட்டில் பார்க்க முடிவதில்லை.

இதே நிலைதான் ஓட்டல்களிலும் தொடர்கிறது. பல்வேறு மாநிலங்களில் தக்காளி விளைச்சல் குறைந்ததன் காரணமாக விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பச்சை மிளகாயும் காரசாரமாக விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பச்சை மிளகாய் சதம் அடித்து விற்பனையாகி வருகிறது. நேற்று பச்சை மிளகாய் கிலோ ரூ.120-க்கு விற்பனையானது.

தாளவாடி

இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கருப்பு அவரை, பச்சை மிளகாய், பீன்ஸ், கேரட், இஞ்சி, சின்ன வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. காய்கறிகள் விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் என்ன சமையல் செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு நேரடியாக செல்லும் வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளியை ரூ.70-க்கு கொள்முதல் செய்கின்றனர். ஆனால் அந்த பகுதியில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனையாகிறது.

மற்ற காய்கறிகள்

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

பீட்ரூட்-ரூ.60, கேரட் -ரூ.80, பட்டை அவரை-ரூ.80, கருப்பு அவரை-ரூ.130, சவ்சவ் -ரூ.30, பீன்ஸ்-ரூ.130, வெண்டைக்காய்-ரூ.30, கத்தரிக்காய்-ரூ.60, பாகற்காய்-ரூ.60, பீர்க்கங்காய்-ரூ.70, புடலங்காய்-ரூ.70, இஞ்சி-ரூ.230 முதல் ரூ.250 வரை, முருங்கைக்காய்-ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.35, முட்டைகோஸ்-ரூ.30, காலி பிளவர்-ரூ.40, சின்ன வெங்காயம்-ரூ.90, பெரிய வெங்காயம்-ரூ.30.


Related Tags :
Next Story