ஈரோடு மார்க்கெட்டில் முருங்கைக்காய், பீன்ஸ் விலை சதம் அடித்தது


ஈரோடு மார்க்கெட்டில் முருங்கைக்காய், பீன்ஸ் விலை சதம் அடித்தது
x
தினத்தந்தி 21 Oct 2023 3:06 AM IST (Updated: 21 Oct 2023 3:07 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மார்க்கெட்டில் முருங்கைக்காய், பீன்ஸ் விலை சதம் அடித்தது

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டில் முருங்கைக்காய், பீன்ஸ் விலை சதம் அடித்தது.

காய்கறி மார்க்கெட்

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஈரோடு சுற்றுப்புற பகுதிகள் மற்றும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் இங்கு வந்து காய்கறியை வாங்கிச்செல்கிறார்கள். தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஈரோடு மார்க்கெட்டுக்கு காய்கறி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

புரட்டாசி மாதம் தொடக்கத்தில் இருந்தே காய்கறி விலை உயரத்தொடங்கியது. தற்போது ஜப்பசி மாதம் தொடங்கி உள்ள நிலையில் தொடர்ந்து முகூர்த்தம் வருவதால் காய்கறியின் தேவை மேலும் அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது.

சதம் அடித்தது

அதன்படி கடந்த வாரம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ அவரைக்காய் மேலும் ரூ.20 விலை உயர்ந்து நேற்று ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ரூ.90-க்கு விற்ற பீன்ஸ், ரூ.70-க்கு விற்பனையான முருங்கைக்காய் விலை சதம் அடித்தது. இதேபோல் மற்ற காய்கறியின் விலையும் சற்று விலை உயர்ந்துள்ளது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறி விலை கிலோவில் வருமாறு:-

பாகற்காய் -ரூ.60, கொத்தவரங்காய் -ரூ.30, கேரட் -ரூ.50 பச்சை மிளகாய் -ரூ.35, பழைய இஞ்சி -ரூ.300, சின்ன வெங்காயம் -ரூ.90, பெரிய வெங்காயம் -ரூ.60, முட்டைகோஸ் -ரூ.20, காலிபிளவர் -ரூ.35, உருளைக்கிழங்கு -ரூ.50, தக்காளி -ரூ.20. கத்தரிக்காய் -ரூ.50, வெண்டைக்காய் -ரூ.30, பீட்ரூட் -ரூ.60.


Next Story