ஈரோடு ரெயில் நிலையத்தில்இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூல்;டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் அவதி


ஈரோடு ரெயில் நிலையத்தில்இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூல்;டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் அவதி
x

ஈரோடு ரெயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் அவதி அடைகிறார்கள்.

ஈரோடு

ஈரோடு ரெயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் அவதி அடைகிறார்கள்.

ரெயில் நிலையம்

ஈரோடு ரெயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் ஏராளமான பயணிகள் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். பயணிகளை இறக்கிவிட வருபவர்களும், வெளியூரில் இருந்த வரவேற்க வரும் நபர்களும் இருசக்கர வாகனங்கள், கார்களில் வருகிறார்கள். அவர்கள் ரெயில் நிலையம் முன்பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு பிளாட்பாரம் டிக்கெட் எடுத்து ரெயில் நிலையத்துக்குள் செல்கிறார்கள்.

இதேபோல் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளும் ரெயில் நிலையத்தின் முன்பு வாகனங்களை நிறுத்திவிட்டு டிக்கெட் கவுண்டர் பகுதிக்கு செல்கிறார்கள். ரெயில் நிலைய வளாகத்தில் ஏ.டி.எம். மையங்களும் செயல்பட்டு வருகின்றன. எனவே பணம் எடுக்க வரும் பொதுமக்களும் அங்கேயே வாகனத்தை நிறுத்துகின்றனர்.

கட்டணம் வசூல்

இந்தநிலையில் ரெயில் நிலையம் முன்பு கார்கள் வந்து செல்லும் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி நிறுத்தப்படும் வானங்களுக்கு பூட்டு போடப்படுகிறது. மேலும், ரெயில் நிலையத்தின் முன்பு ஓரமாக இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

ஈரோடு ரெயில் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். ரெயிலில் வெளியூர் செல்பவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு செல்வதற்கு கட்டணம் செலுத்தலாம். ஆனால் உடன் வருபவர்களை இறக்கிவிட்டு செல்பவர்கள், டிக்கெட் முன்பதிவு செய்ய வருபவர்கள், ரெயில் நேரம் தொடர்பாக விசாரணைக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை சிறிது நேரம் நிறுத்துவதற்கு கட்டணம் கேட்பது எந்தவகையில் நியாயம்? அதேபோல் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வருபவர்களும் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். எனவே சிறிதுநேரம் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதை கைவிட ரெயில் நிர்வாகம் முன்வரவேண்டும். வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் எங்கு வாகனங்களை நிறுத்துவது என்று குழப்பம் அடைகிறார்கள். எனவே இடம் தனியாக ஒதுக்கீடு செய்து இருசக்கர வாகன நிறுத்துமிடம் என்ற பெயர் பலகையும் வைக்க வேண்டும்.


Related Tags :
Next Story