ஈரோட்டில்தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் கைது
ஈரோட்டில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டாா்.
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஈரோடு, டவுன், கருங்கல்பாளையம், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஈரோடு வீரப்பன் சத்திரம் காமராஜர் வீதியை சேர்ந்த ரவி என்கிற வேட்டை ரவி என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story