ஈரோட்டில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு
திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். மூத்த வக்கீல்கள் திருமலை ராஜன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு சத்தி ரோட்டில் சாலை விரிவாக்க பணிகளை எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காத வகையில் நிறைவேற்றக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நீரோடை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் நிலவன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story