ஈரோட்டில்ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி


ஈரோட்டில்ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
x

ஈரோட்டில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடந்தது.

ஈரோடு

தொடக்க பள்ளிகள் இயக்ககம் சார்பில் மாணவர்களுக்கு எளிதாக கற்றுக்கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் ஈரோடு காவிரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த பயிற்சி முகாமில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு ஆசிரிய- ஆசிரியைகள் 130 பேர் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு பெருந்துறை ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் அன்புராஜ், மேற்பார்வையாளர் மயில்சாமி, ஆசிரியர் பயிற்றுனர்கள் கோமதி, சுகன்யா உள்பட 18 கருத்தாளர்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.


Next Story