எட்டயபுரத்தில்விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


எட்டயபுரத்தில்விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக எட்டயபுரம் பஸ் நிலையம் எதிரே பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எட்டயபுரம் தாலுகா செயலாளர் ஜீவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் திட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க வேண்டும், மகளிர் உரிமை தொகை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை நீக்கி, தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இளம்புவனம் கிளைச் செயலாளர் கருப்பசாமி, ஆட்டோசங்க தலைவர் கண்ணன், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் ஆதீஸ்வரன் உள்பட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story