கடத்தூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
கடத்தூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா்.
கடத்தூர்
கோபி அருகே உள்ள காசிபாளையம் நடராஜ் வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் நவீன்குமார் (வயது24). பி.டெக் படித்துள்ள இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கவுந்தப்பாடி அருகே உள்ள வடகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் சந்திரன் மகள் ரம்யா (23). பி.பி.ஏ. பட்டதாரி.
இந்த நிலையில் ரம்யாவும், நவீன்குமாரும் கல்லூரியில் படித்த போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. அதைத்தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்ததால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் 2 பேரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறி அரசூரில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கடத்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து கடத்தூர் போலீசார் 2 பேரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் காதல் திருமணத்தை நவீன்குமாரின் வீட்டில் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அவரது வீட்டுக்கு நவீன்குமாரும், ரம்யாவும் சென்றனர்.