கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.57 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.57 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.
ஈரோடு
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இதற்கு கவுந்தப்பாடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 385 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் 60 கிலோ மூட்டை முதல் தர திடம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக (குவிண்டால்) ரூ.2 ஆயிரத்து 740-க்கும், அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து 760-க்கும் ஏலம் போனது. மீடியம் ரக நாட்டு சர்க்கரை (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 600-க்கும், அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து 630-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2 ஆயிரத்து 133 மூட்டைகளில் உள்ள 1 லட்சத்து 27 ஆயிரத்து 980 கிலோ எடையுள்ள நாட்டு சர்க்கரையை ரூ.57 லட்சத்து 3 ஆயிரத்து 290-க்கு பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தினர் கொள்முதல் செய்தனர்.
Related Tags :
Next Story