கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.29¾ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.29¾ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.29¾ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது. பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்தது.
நாட்டு சர்க்கரை
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,348 மூட்டைகளில் நாட்டு சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 620-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 670-க்கும், சராசரி விலையாக ரூ.2 ஆயிரத்து 650-க்கும் ஏலம் போனது.
பழனி கோவில் கொள்முதல்
மீடியம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக ரூ.2,500-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 570-க்கும், சராசரி விலையாக ரூ.2 ஆயிரத்து 540-க்கும் என மொத்தம் ரூ.29 லட்சத்து 65 ஆயிரத்து 390-க்கு ஏலம் போனது.
இதனை பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம் முழுவதுமாக கொள்முதல் செய்தது.