தூத்துக்குடி கோக்கூர் குளத்தில்மீன்கள் செத்து தூர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி


தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கோக்கூர் குளத்தில் மீன்கள் செத்து தூர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கோக்கூர் குளம் அமைந்து உள்ளது. இந்த குளத்தில் ஓரளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த குளத்தில் ஏராளமான மீன்கள் காணப்படுகின்றன. இந்த குளத்தின் அருகே மழைநீரை வெளியேற்றுவதற்கான நிரந்தர மோட்டார் அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று இந்த குளத்தில் உள்ள மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் அந்த குளத்தின் கரையில் உள்ள மின்மோட்டார் அறையில் இருந்த எண்ணெய் போன்ற திரவம் குளத்தில் பரவி இருப்பதால் மீன்கள் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இறந்த மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story