விளாத்திகுளம், கோவில்பட்டியில்ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


விளாத்திகுளம், கோவில்பட்டியில்ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம், கோவில்பட்டியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விளாத்திகுளம் வட்டாரச் செயலாளர் இப்ராகிம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும், தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிட வேண்டும், காலை உணவுத் திட்டப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் விடுவித்து அத்திட்டம் சார்ந்த அனைத்துப் பணிகளையும் சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோன்று கோவில்பட்டியிலும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story