கூடலூர் மந்தை வாய்க்கால் பாலம் பகுதியில்காட்சி பொருளான உயர்கோபுர மின்விளக்குபயன்பாட்டுக்கு வருமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


கூடலூர் மந்தை வாய்க்கால் பாலம் பகுதியில்காட்சி பொருளான உயர்கோபுர மின்விளக்குபயன்பாட்டுக்கு வருமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் மந்தை வாய்க்கால் பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பயன்பாட்டுக்கு வருமா என்று வாகன ஓட்டிகள் எதிா்பார்ப்பில் உள்ளனர்.

தேனி

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகள் வழியாக குமுளிக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கூடலூர் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்து வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் கூடலூர் வடக்கு புறவழி இணைப்புச் சாலை மற்றும் தெற்கு மந்தை வாய்க்கால் இணைப்புச் சாலை பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்கு மந்தை வாய்க்கால் பாலம் அருகே அமைக்கப்பட்டிருந்த உயர்கோபுர மின்விளக்கு மீது சரக்கு வாகனம் மோதி சேதம் அடைந்தது. இதையடுத்து அங்கு புதிய உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. ஆனால் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாமல் காட்சி பொருளாகவே உள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மந்தை வாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Related Tags :
Next Story