குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இலவச திருமணம்


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இலவச திருமணம்
x
தினத்தந்தி 7 July 2023 6:45 PM GMT (Updated: 7 July 2023 6:45 PM GMT)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இலவச திருமணம் நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதல்படி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சுடலைமணி, ஒண்டிவீரன் நகரை சேர்ந்த முத்துமாரி ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், திருமாங்கல்யம், பீரோ, கட்டில் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் க. இளங்கோ, குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் சொர்ண பிரியாத்துரை, சாத்தான்குளம் ஆய்வர் பகவதி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story