மெரினா கடற்கரையில் மாற்றுதிறனாளிகளுக்கான நடைபாதை அமைக்கும் பணி தீவிரம்


மெரினா கடற்கரையில் மாற்றுதிறனாளிகளுக்கான நடைபாதை அமைக்கும் பணி தீவிரம்
x

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுதிறனாளிகளுக்கு நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை மக்களின் பிரதான பொழுதுபோக்கு மையமாக இருப்பது மெரினா கடற்கரையாகும். மெரினாக கடற்கரையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. கண்ணகி சிலை, அறிஞர் அண்ணா சமாதி, மறைந்த முதல்-அமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதி, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரான கருணாநிதி சமாதி மெரினா கடற்கரையில் உள்ளது. இதனை கண்டுகளித்து பொழுதை கழிப்பதற்காக பெரும்பாலான மக்கள் திரளாக குவிந்து வருகின்றனர்

இந்நிலையில் மாற்றுதிறனாளிகள் கடற்கரைக்கு செல்வதற்கு வசதியாக அவர்களுக்காக பிரத்யேகமாக நடைபாதை அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. விவேகானந்தா இல்லம் எதிரே 250 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலம் கொண்ட நிரந்தர பாதை இது அமைக்கப்பட்டு வருகிறது. சவுக்கு, கருவேலமரக் கட்டைகளால் இந்த பாதை அமைக்கப்படுகிறது.


Next Story