சில்லாங்குளம் முத்துக்கருப்பன் நினைவு பள்ளியில்மனிதநேய வார நிறைவு விழா


சில்லாங்குளம் முத்துக்கருப்பன் நினைவு பள்ளியில்மனிதநேய வார நிறைவு விழா
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-02-01T00:16:11+05:30)

சில்லாங்குளம் முத்துக்கருப்பன் நினைவு பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

சில்லாங்குளம் முத்துகருப்பன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மனித நேய வார நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட வருவாய அலுவலர் அஜய் சினிவாசன் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் முன்னிலை வைத்தார். முத்துகருப்பன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரும், பள்ளி நிர்வாக இயக்குனருமான பாலமுருகன் கருப்பசாமி வரவேற்று பேசினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மனிதநேய வார விழாவை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டி மற்றும் கலை இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வருவாய அலுவலர் பரிசுகள் வழங்கினார். விழாவில் மாவட்ட அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாணயம், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, சில்லங்குளம் பஞ்சாயத்து தலைவர் சரோஜா கருப்பசாமி, பள்ளி நிர்வாக மேற்பார்வையாளர் விமலா பாலமுருகன், தாசில்தார்கள் தில்லைப்பாண்டி, தெய்வகுருவம்மாள், மண்டல துணை தாசில்தார்கள் இசக்கி முருகேஸ்வரி, சேகர், பசுவந்தனை வருவாய் ஆய்வாளர் விஜி, ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கரக்குமார், வரதராஜன், விடுதிக்காப்பாளர்கள் பாஸ்கர், ராஜாகனி மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். சமுக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் செல்வகுமார் நன்றி கூறினார்.


Next Story