சிவகிரி அருகே நாகத்தம்மன் கோவிலில் 30 கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம்


சிவகிரி அருகே நாகத்தம்மன் கோவிலில் 30 கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம்

ஈரோடு

சிவகிரி

சிவகிரி அருகே செட்டிதோட்டம்புதூர் கீழ்பவானி வாய்க்கால் கரையில் நாகத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 20-ந் தேதி நாக பஞ்சமியையொட்டி பொங்கல் விழா நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று மதியம் கோவிலில் நாகத்தம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சிவகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பின்னர் மாசிபெரியண்ணன், மகாமுனிக்கு நேர்த்திக்கடனாக 30 கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story