புதூர் லூர்து அன்னை ஆலயத்தில்நன்றியறிதல் விழா கொடியேற்றம்


புதூர் லூர்து அன்னை ஆலயத்தில்நன்றியறிதல் விழா கொடியேற்றம்
x

புதூர் லூர்து அன்னை ஆலயத்தில் நன்றியறிதல் விழா கொடியேற்றம் நடந்தது.

மதுரை


மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை திருத்தலம், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இந்த நிலையில், கடவுள் செய்த நன்மைக்காக நன்றியறிதல் விழா கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று திருச்சி சலேசிய சபையின் மாநில தலைவர் அருட்தந்தை அகிலன் தலைமையேற்று நன்றியறிதல் விழாவின் தொடக்கமாக கொடியேற்றி வைத்தார். பின்னர் "தலைமுறை தலைமுறையாய்" என்ற தலைப்பில் மரியன்னை பற்றி மறையுரை ஆற்றி, கூட்டு திருப்பலி நிறைவேற்றினார். பங்குத்தந்தை ஜார்ஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் பாக்கியராஜ், யூஜின் மற்றும் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நன்றி விழாவின் ஒரு பகுதியாக வருகிற 1-ந்தேதி மற்றும் 8-ந் தேதிகளில் "பொன்மயமான ஆலயமே" என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்தி பொங்கல் விழா நடைபெற இருக்கிறது.

நன்றி விழாவின் நிறைவாக, வருகிற 11-ந்தேதி அன்று மதுரை உயர் மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடத்தப்பட்டு, அந்த நாளை அன்னையின் நாள் என கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


Next Story