கோவில்பட்டி பத்ம பிரபா மருத்துவ மனையில்லேசர், அழகியல் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு விழா


கோவில்பட்டி பத்ம பிரபா மருத்துவ மனையில்லேசர், அழகியல் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு விழா
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:46 PM GMT)

கோவில்பட்டி பத்ம பிரபா மருத்துவ மனையில் லேசர், அழகியல் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெரு டாக்டர் காந்திராஜ் ஆஸ்பத்திரி, பத்மபிரபா மருத்துவமனையில் உயர்தர நவீன லேசர் மற்றும் அழகியல் சிறப்பு சிகிச்சை மையத் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ். காந்திராஜ் தலைமை தாங்கினார். டி. கோபால்சாமி முன்னிலை வகித்தார். டாக்டர் பத்ம பிரகாஷ் காந்தி ராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் டாக்டர் பால கங்காதர திலகம், ராஜேஸ்வரி காந்திராஜ், டாக்டர் டி.ஜி. நர்மதா தேவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினா். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராஜேஸ்வரி காந்திராஜ் நவீன லேசர் மற்றும் அழகிகள் சிறப்பு சிகிச்சை கருவியை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு மருத்துவர் டி.ஜி. நர்மதா தேவி உயர்தர நவீன லேசர் மற்றும் அழகியல் சிறப்பு சிகிச்சை மூலம் தேவையற்ற முடியை அகற்றுதல், முகப்பொலிவு, முகப்பரு மற்றும் கருந்திரட்டுக்களுக்கான சிகிச்சை, முகப்பொலிவு மற்றும் முகச்சுருக்கங் களுக்கான சிகிச்சை, தழும்புகளுக்கான சிகிச்சை, முடி உதிர்தலுக்கான சிகிச்சை, மரு மற்றும் கீலாய்டுக்கான சிகிச்சை, மரு மற்றும் கரும்புள்ளிகளுக்கான சிகிச்சை, வெண் படைக்கான பிரத்தியேக சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறினார். டாக்டர் டி.ஜி. நர்மதா தேவி நன்றி கூறினார்.


Next Story