பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.42 லட்சம் உண்டியல் காணிக்கை


பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.42 லட்சம் உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 20 Oct 2023 2:31 AM IST (Updated: 20 Oct 2023 2:32 AM IST)
t-max-icont-min-icon

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.42 லட்சத்தை பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

ஈரோடு

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.42 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தி இருந்தனர்.

மாரியம்மன் கோவில்

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 21 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட்டு எண்ணப்படும்.

அதன்படி இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

ரூ.42 லட்சம்

பண்ணாரி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சுவாமிநாதன், சத்தியமங்கலம் அறநிலையத்துறை ஆய்வாளர் சிவமணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதில் ரூ.42 லட்சத்து 35 ஆயிரத்து 150-ஐ காணிக்கையாக உண்டியலில் பக்தர்கள் செலுத்தி இருந்தனர். மேலும் 103 கிராம் தங்கம், 290 கிராம் வெள்ளி ஆகியவையும் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.


Next Story