எஸ்.புதூர், திருப்புவனம், இளையான்குடியில்மின்சாரம் நிறுத்தம்


எஸ்.புதூர், திருப்புவனம், இளையான்குடியில்மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 24 Oct 2023 7:00 PM GMT (Updated: 24 Oct 2023 7:00 PM GMT)

எஸ்.புதூர், திருப்புவனம், இளையான்குடி பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை

திருப்புவனம்

பராமரிப்பு பணி

திருப்புவனம் நெல்முடிகரை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்புவனம், தி.புதூர், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், டி.பாப்பாங்குளம், தூதை, திருப்பாச்சேத்தி, மாரநாடு, கொத்தங்குளம், கீழச்சொரிக்குளம், பிரமனூர், மேலச்சொரிக்குளம், முதுவந்திடல், பழையனூர், வயல்சேரி, சொக்கநாதிருப்பு, கீழராங்கியம், மேலராங்கியம், அல்லிநகரம், அ.வெள்ளக்கரை, நயினார்பேட்டை, கலியாந்தூர், கீழவெள்ளளூர், மேலவெள்ளூர், மாங்குடி, அம்பலத்தாடி, முக்குடி, செங்குளம், காஞ்சிரங்குளம், பொட்டப்பாளையம், புலியூர், சாய்னாபுரம், பாட்டம், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, மணலூர், கழுகேர்கடை, தட்டான்குளம், வடகரை, மடப்புரம், பூவந்தி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்தார்.

மின்சாரம் நிறுத்தம்

அதேபோல் இளையான்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரகுடி, கீழாயூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என மானாமதுரை கோட்ட செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட எஸ்.புதூர் துணைமின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான எஸ்.புதூர், வாராப்பூர், புழுதிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Next Story