சாலிமரத்துப்பட்டியில்காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்
சாலிமரத்துப்பட்டியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
போடி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கிராம ஆலோசனை கூட்டம் போடி அருகே உள்ள சாலிமரத்துப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு போடி வட்டார காங்கிரஸ் தலைவர் ஜம்பு சுதாகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சாந்தி முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட தலைவர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,
சாலிமரத்துப்பட்டி கிராமத்தில் மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் கஷ்டப்படுகின்றனர், அவர்களுக்கு அடிப்படை வசதி அமைத்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்தும் பேசினார்.
கூட்டத்தில் போடி நகர காங்கிரஸ் தலைவர் முசாக் மந்திரி, மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, கம்பம் வட்டார தலைவர் ராஜா முஹம்மது, விவசாயிகள் சங்க காங்கிரஸ் தலைவர் இனியவன், தேனி நகர தலைவர் கோபிநாத், பொதுக்குழு உறுப்பினர்களான முனியாண்டி, பெருமாள், கடல்பிரபு, சின்ன பாண்டி மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.