சத்தி மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.1,080-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.1,080-க்கு ஏலம்
x

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,080-க்கு ஏலம் போனது

ஈரோடு

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு 5 டன் பூக்கள் கொண்டு வரப்பட்டன.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,080-க்கும், முல்லை ரூ.360-க்கும், காக்கடா ரூ.350-க்கும், செண்டுமல்லி ரூ.26-க்கும், பட்டுப்பூ ரூ.35-க்கும், சாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.70-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும் ஏலம் போனது.


Next Story