சத்தி மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.1,732-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.1,732-க்கு ஏலம்
x
தினத்தந்தி 25 Jan 2023 7:30 PM GMT (Updated: 25 Jan 2023 7:30 PM GMT)

மல்லிகைப்பூ

ஈரோடு

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 1.5 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,732-க்கும், முல்லை ரூ.1,680-க்கும், காக்கடா ரூ.675-க்கும், செண்டுமல்லி ரூ.69-க்கும், பட்டுப்பூ ரூ.140-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.550-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் ஏலம் போனது.


Next Story