செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருமண மண்டபம் கட்டும் பணி தொடக்கம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருமண மண்டபம் கட்டும் பணியை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் 2 தளங்களுடன் கூடிய திருமண மண்டபம் கட்டும் பணியை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், செயற்பொறியாளர் கணேசன், கோவில்பட்டி நகர தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவருமான கா.கருணாநிதி, கழுகுமலை பேரூராட்சி துணை தலைவர் சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை உதவிக் கோட்ட பொறியாளர் சத்யன், உதவி பொறியாளர் ரெங்கசாமி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, அறநிலையத்துறை ஆய்வாளர் சிவகலைப்பிரியா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.