சுரங்கனார் நீர்வீழ்ச்சியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க கோரிக்கை


சுரங்கனார் நீர்வீழ்ச்சியில்  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க கோரிக்கை
x

கூடலூர் அருகே சுரங்கனார் நீர்வீழ்ச்சியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

தேனி

ூடலூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சுரங்கனார் நீர் வீழ்ச்சி உள்ளது. தமிழக-கேரள வனப்பகுதியையொட்டிய மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. இந்த தண்ணீர் கூடலூர் நகர மையப்பகுதியில் உள்ள மைத்தலை மன்னடியான்குளத்தில் வந்து தேங்குகிறது. இதனால் ஒட்டாண்குளம், ஈஸ்வரன் கோவில் புலம், பாரவர்தான் ஆகிய பகுதிகளில் உள்ள 406 ஏக்கரில் விவசாயிகள் இரு போக நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மைத்தலை மன்னடியான் குளத்திற்கு தண்ணீர் வரும் சுரங்கனார் நீர் வீழ்ச்சிஅருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து மலைப்பகுதியில் இருந்து மண், செடி, கொடிகள், மரங்கள் சரிந்ததால் அருவியில் விழும் தண்ணீர் வேறு திசையில் செல்கிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சுரங்கனார் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட நிலச்சரிவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர். இந்நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தற்போது சுரங்கனார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது குறிப்பிடத்தக்கது.


Next Story