அரிய குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரிய குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பெரம்பலூர்
சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் ஒரு கர்ப்பிணிக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தைக்கு பிறந்தது. அந்த குழந்தைக்கு சிறுநீரகப்பை மற்றும் பிறப்பு உறுப்பு வயிற்றுக்கு வெளியே தெரியும்படி இருந்தது. இந்த குறைபாடு 50 ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படி அரிதான குறைபாடுள்ள அந்த குழந்தை பிறந்து 3 நாட்களே ஆன நிலையில், அந்த குழந்தைக்கு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் முதன்முறையாக குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர், மயக்க மருந்து மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உதவியுடன் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். தற்போது அந்த குழந்தை நலமுடன் உள்ளது.
Related Tags :
Next Story