தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு


தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:46 PM GMT)

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெகடர் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெகடர் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மகளிர் உரிமைத்தொகை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து தகுதியான பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று புகார் கூறப்பட்டது.

இந்த நிலையில் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மீண்டும இன்று (புதன்கிழமை) விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில் நேற்று மாலை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டையுடன் திடீரென குவிந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது.

உரிய நடவடிக்கை

தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு கூடி இருந்த பெண்களிடம் கலந்துரையாடினார். மீண்டும் மனுக்கள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதி இருந்தும் கிடைக்காதவர்களுக்கு தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பணம் கிடைக்காதவர்கள் ரேசன் கார்டு, ஆதார்கார்டு செல்போன் எண் கொடுத்து விட்டு செல்லுங்கள் பரிசீலனை செய்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்து சென்றார். இதையடுத்து தரங்கம்பாடி தாசில்தார் சரவணன் மனுக்களை பெற்றார். இதுவரை 233 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.


Next Story