ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில்  கலெக்டர் திடீர் ஆய்வு
x

ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார்

தேனி

ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார். அங்கு செயல்படும் ஆதார் மையம், அரசு பொது இ-சேவை மையம், நில அளவை பிரிவு ஆகிய இடங்களுக்கு சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். ஆய்வின்போது, பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு வருமான சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பத்தின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி துரிதமாக சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று அங்கிருந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். பின்னர், ஆண்டிப்பட்டி அருகே ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கதிர்நரசிங்கபுரத்தில் உள்ள ரேஷன் கடை ஆகிய இடங்களிலும் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


Next Story