குற்றாலம் சாரல் விழாவில் சைக்கிள் போட்டி


குற்றாலம் சாரல் விழாவில் சைக்கிள் போட்டி
x

குற்றாலம் சாரல் விழாவில் சைக்கிள் போட்டி நடந்தது.

தென்காசி

குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெற்று வருகிறது. 5-வது நாள் நிகழ்ச்சியான நேற்று சைக்கிள் மாரத்தான் போட்டி நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு குற்றாலத்தில் தொடங்கி காசிமேஜர்புரம், வல்லம், பிரானூர், செங்கோட்டை, பண்பொழி, குத்துக்கல்வலசை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது. இதில் மொத்தம் 160 பேர் கலந்து கொண்டனர். மதுரையைச் சேர்ந்த மகேஸ்வரன் முதலாவது பரிசையும், யுவன் சங்கர் 2-வது பரிசையும், ஆலங்குளத்தை சேர்ந்த ஆபிரகாம் 3-வது பரிசையும் பெற்றனர்.


Next Story