மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று, தனியார் வேலைவாய்ப்பு முகாம்


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று, தனியார் வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:40 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 3-ம் அல்லது 4-ம் வௌ்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (வௌ்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த மாணவர்கள் மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் முகாமில் கலந்துகொண்டு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெறலாம். மேலும் முகாமில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான விண்ணப்ப படிவம், போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் ஆகியவையும் வழங்கப்படும். முகாமில் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story