விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


விடைத்தாள் திருத்தும் மையத்தில்  ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ேதனியில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி

தேனியில் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2019-ம் ஆண்டுக்கு முன்பு அரசு ஒப்புதலுடன் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும், ஆசிரியர், மாணவர்கள் நலன் கருதி கற்றல், கற்பித்தல் பணியை மட்டும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். இதில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story