கோபி உழவர் சந்தையில், கடந்த மாதம் ரூ.79¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை


கோபி உழவர் சந்தையில், கடந்த மாதம் ரூ.79¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
x

கோபி உழவர் சந்தையில், கடந்த மாதம் ரூ.79¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.

ஈரோடு

கோபி

கோபி அருகே உள்ள மொடச்சூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைக்கு நாதிபாளையம், சுண்டப்பாளையம், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம், வெள்ளாங்கோவில், கொளப்பலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களில் விளைந்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 802 விவசாயிகள் 2 லட்சத்து 97 ஆயிரத்து 50 கிலோ காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.79 லட்சத்து 17 ஆயிரத்து 507-க்கு விற்பனை ஆனது. மொத்தம் 31 ஆயிரத்து 885 பேர் காய்கறிகளை வாங்கி சென்று உள்ளனர்.

இந்த தகவலை கோபி உழவர் சந்தை நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

1 More update

Related Tags :
Next Story