தாய்-சேய் நல மையத்தில் பொதுசுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு


தாய்-சேய் நல மையத்தில் பொதுசுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 23 July 2023 1:36 AM IST (Updated: 23 July 2023 4:53 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் தாய்-சேய் நல மையத்தை பொதுசுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் தாய்-சேய் நல மையத்தை பொதுசுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கர்ப்பிணிகளை போனில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினார்.

தாய்-சேய் நல மையம்

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட கல்லுக்குளம், கரந்தை, மகர்நோம்புசாவடி, மற்றும் சீனிவாசபுரம் ஆகிய 4 நான்கு நகர்புற சுகாதார நிலையங்களில் தற்போது கர்ப்பகால பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 1,081 கர்ப்பிணிகளில் 573 கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, தைராய்டு மற்றும் முந்தைய பிரசவ அறுவை சிகிச்சை போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டு அவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பாக இயங்கி வரும் தாய்சேய் நல மையத்தின் வழியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த தாய்-சேய் நல மையம் தஞ்சை மாநகராட்சி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. நகர்புற ஆரம்ப சுகாதார செவிலியர்களுக்கு சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிவப்பு நிறத்தை பச்சை நிறமாக மாற்றிய விவரங்கள் மீண்டும் தாய்சேய் நல மையத்திற்கு அனுப்பி கண்காணிக்கப்படும். இவ்வாறு இந்த தாய்சேய் நல மையத்தின் மூலம் மாதம் இருமுறை அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு முறையாக கர்ப்பகால கவனிப்பை கண்காணித்தல் மற்றும் பரிசோதனை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனார்.

மருத்துவ ஆலோசனை

தஞ்சை மாநகராட்சி வளாகத்தில் செயல்பட்டு வரும் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் சேகர் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், நோடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணி தாய்மாருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். மேலும் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தில் பணியாற்றி வரும் ஆர்த்தி, புவனேஸ்வரி, சிவாஜி, பாலாஜி மற்றும் பன்னீர் ஆகியோரை பாராட்டி ஆலேசானைகளையும்வழங்கினார்.

ஆய்வின் போது மாநகராடசி ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story