தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்அர்ஜூன் சம்பத் மீதுநாடார் சங்கத்தினர் புகார்


தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்அர்ஜூன் சம்பத் மீதுநாடார் சங்கத்தினர் புகார்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அர்ஜூன் சம்பத் மீது நாடார் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி

பாண்டியனார் மக்கள் இயக்கம், நாடார் விழிப்புணர்வு சங்கம் உள்ளிட்ட நாடார் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பாண்டியனார் மக்கள் இயக்க தலைவர் சீனி நாடார் தலைமையில் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் மனு கொடுத்தனர்.

அதில் கூறிஇருப்பதாவது:-

இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 2-ந் தேதி தூத்துக்குடியில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பேசிய அந்த கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், நாடார்கள் குறித்து அவதூறாக பேசி உள்ளார்.

தென் மாவட்டங்களில் சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையிலும், வேறு சமுதாயத்தினரை மேடையில் வைத்துக் கொண்டும் நாடார் சமுதாயம் பற்றி அவதூறாக பேசி உள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். ஆகையால் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story