குரங்கணியில் நடந்தமக்கள் களம் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்:கனிமொழி எம்.பி. வழங்கினார்
குரங்கணியில் நடந்தமக்கள் களம் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
தென்திருப்பேரை:
குரங்கணியில் நடந்த மக்கள் களம் நிகழ்ச்சியில் 44 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
தென்திருப்பேரை அருகேயுள்ள குரங்கணியில் மக்கள் களம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி, 44 பயனாளிகளுக்கு ரூ.52.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். ் தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து அங்கமங்கலம் பஞ்சாயத்தில் 25 பயனாளிகளுக்கு ரூ.2.82 லட்சம் மதிப்பீட்டிலும், ராஜபதி பஞ்சாயத்தில் 26 பயனாளிகளுக்கு ரூ.15.31 லட்சம் மதிப்பீட்டிலும் அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் ராஜபதி-மணத்தி சாலைப்பணியை அடிக்கல் நாட்டி அவர் தொடங்கி வைத்தார். அந்த பகுதிகளிலும் கிராம மக்களிடம் கோரிக்ைக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், ஏரல் தாசில்தார் கைலாஸ் குமாரசாமி, தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலீலா, ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன்இசக்கி, தென்திருப்பேரை பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்த் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
இதேபோன்று திருச்செந்தூர் யூனியன் உட்பட்ட மேல திருச்செந்தூர், பிச்சிவிளை, காயாமொழி ஆகிய பஞ்சாயத்துக்களில் 'மக்கள் களம்' என்ற மக்களின் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிகள், மேல திருச்செந்தூர் பஞ்சாயத்தில் நா.முத்தையாபுரத்திலும், பிச்சிவிளை பஞ்சாயத்தில் பிச்சிவிளையிலும், காயாமொழி பஞ்சாயத்தில் குமாரசாமிபுரத்திலும் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். மேலும், பெண்களுக்கு தையல் எந்திரம், சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மருத்துவ பெட்டகங்கள், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ரூ.60 லட்சத்து 5 ஆயிரத்து 712 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மொத்த 44 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், தாசில்தார் வாமனன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆன்றோ, பொங்கலரசி, பஞ்சாயத்து தலைவர்கள் மகாராஜன் (மேல திருச்செந்தூர்), ராஜேஸ்வரன் (காயாமொழி), காயாமொழி சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் பாசில்நூகு, மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், ஆய்வாளர்கள் தினேஷ், ஜெய்சங்கர், செல்வகுமார், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், நகர செயலாளர் வாள்சுடலை, உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.