கோவில்பட்டியில் அஞ்சல் அலுவலகத்தில்தபால்தலை கண்காட்சி


கோவில்பட்டியில் அஞ்சல் அலுவலகத்தில்தபால்தலை கண்காட்சி
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அஞ்சல் அலுவலகத்தில் தபால்தலை கண்காட்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று தலைமை தபால் நிலையத்தில் தபால்தலை கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சிைய கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் பழைய தபால் தலைகள், நாணயங்கள், புராதன பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. கோவில்பட்டியில் பகுதியிலுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து காலை முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் குவிந்து கண்காட்சியை கண்டுகளித்தனர்.


Next Story