கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்


கதர் அங்காடியில்  தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்
x

கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் தாந்தோன்றிமலை கதர் அங்காடியில் நேற்று மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு கலெக்டர் பிரபுசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2022-2023-ம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையின் போது ரூ.1 கோடியே 48 லட்சம் மதிப்புள்ள கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 95 லட்சத்தில் கதர் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு சுதர் கிராமத் தொழில் வாரியத்தால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கதர், பாலிஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் சில பட்டு ரகங்களுக்கு 50 சதவீதம் வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் காதி கிராப்ட் பொருட்களை www.tnkvib.org என்ற ஆன்லைன் மூலமும் வாங்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், கதர் ஆய்வாளர் பொன்ராஜ், கதரங்காடி மேலாளர் முத்துசாமி, வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story