லாரி உரிமையாளர் வீட்டில் 24 பவுன் நகைகள் கொள்ளை


லாரி உரிமையாளர் வீட்டில் 24 பவுன் நகைகள் கொள்ளை
x

திருச்செங்கோடு அருகே லாரி உரிமையாளர் வீட்டில் 24 பவுன் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்

திருச்செங்கோடு

லாரி உரிமையாளர்

திருச்செங்கோடு அருகே சித்தாளந்தூர் பழைய புளியம்பட்டி குன்னங்கால் காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). லாரி உரிமையாளர். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் நேற்றுமுன்தினம் வெளியே சென்றிருந்தார். பின்னர் சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து கணேசன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

மேலும் பீரோவில் வைத்திருந்த 24 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

விசாரணை

இதுகுறித்து கணேசன் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்செங்கோடு அருகே லாரி உரிமையாளர் வீட்டில் மர்மநபர்கள் 24 பவுன் நகைகள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story