தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகிற அக்.18-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அரசு ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக.18-ந் தேதி நடக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், பணியிலிருக்கும்போது மரணமடைந்தவர்கள் ஆகியோரது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வு கால பலன்கள் பெறுவதில் ஏற்படுகின்ற குறைகளை நேரடியாக கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றும் பொருட்டு 'ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த மாதம் 18-ந் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கிறது. இதில் சென்னை ஓய்வூதிய இயக்குநர் கலந்து கொள்கிறார்.

2 பிரதிகளில் விண்ணப்பம்

எனவே ஓய்வூதியம் தொடர்பான குறைகள் உள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் அவர்கள் கடைசியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பதவி மற்றும் அலுவலகத்தின் பெயர், ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதிய கொடுப்பாணை எண், ஓய்வூதியம் பெற்றுவரும் கருவூலத்தின் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண், கோரிக்கை விபரம். கோரிக்கை எந்த அலுவலரிடம் நிலுவையிலுள்ளது? போன்ற விபரங்களுடன் இந்த மாதம் 22-ந்தேதிக்குள் மாவட்ட ஆட்சியர், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரிக்கு 2 பிரதிகளில் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். 22-ந்தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் விண்ணப்பித்த ஓய்வூதியதாரர்கள் அக்.18-ந்தேதி அன்று காலை 10.30 மணிக்கு நடத்தப்படும் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார்.


Next Story