திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்


திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில்  ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்
x

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி 7 ஆண்டுக்கு பின் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி 7 ஆண்டுக்கு பின் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆதிகேசவ பெருமாள் கோவில்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகளுக்காக 7 ஆண்டுக்கு முன்பு கருவறையில் இருந்த அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் பாலாலயத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் கருவறையில் பாம்பணை மீது பள்ளி கொண்டு அருள்பாலிக்கும் ஆதிகேசவ பெருமாளை ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு இல்லாமல் போனது.

கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் இருந்து சாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அனுமதிக்கப்படவில்லை. இதுபற்றிய செய்தி, 'தினத்தந்தி'-யில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் நின்று சாமியை பக்தர்கள் தரிசனம் செய்ய பாதுகாப்பு கம்பிகள் இணைக்கும் பணி நேற்று முன் தினம் முடிந்தது.

பக்தர்கள் சாமி தரிசனம்

அதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குப்பின்னர் 8.30 மணி வரையும் பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

7 ஆண்டுக்கு பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி சாமி தரிசனம் செய்த பக்தர்கள் பரவசத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.


Next Story