திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:45 PM GMT)

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா மற்றும் உள்தர மதிப்பீட்டு பிரிவின் சார்பில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். உள்தர மதிப்பீட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலன்ட் நைட் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி புற்றுநோய் மருத்துவத்துறை பேராசிரியர் காந்திமதி பத்மநாபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் புற்றுநோயை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து விளக்கி பேசினார். புற்றுநோய் தொடர்பாக மாணவியர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த நிகழ்ச்சியின்போது யோகா மன்றத்தின் சார்பில் நடைபெற்ற சூரிய நமஸ்காரம் வீடியோ போட்டியில் வெற்றிபெற்ற விலங்கியல்துறை உதவி பேராசிரியர் லிங்கதுரை, முதுநிலை வேதியியல் அறிவியல் பிரிவு மாணவர் பாலாஜி ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை யோகா மன்றத்துணை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியமேரி பெர்னாந்தஸ் தொகுத்து வழங்கினார். யோகாமன்ற ஒருங்கிணைப்பாளர் தே.வசுமதி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அனைத்து பெண்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், முதுநிலை மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story