திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தனி மனித சுகாதாரம் குறித்த கருத்தரங்கு


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தனி மனித சுகாதாரம் குறித்த கருத்தரங்கு
x
தினத்தந்தி 14 Sep 2023 6:45 PM GMT (Updated: 14 Sep 2023 6:47 PM GMT)

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தனி மனித சுகாதாரம் குறித்த கருத்தரங்கு நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் நல அமைப்பு சார்பாக, 'தனி மனித சுகாதாரம்' என்ற தலைப்பில் முதுகலை மாணவியருக்கு கருத்தரங்கு நடைபெற்றது. இ்க்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். மகளிர்நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சி.நித்தியானந்த ஜோதி வரவேற்று பேசினார். ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார். இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் என்.கலைக்குருசெல்வி கலந்து கொண்டு தனிமனித சுகாதாரம் குறித்து விளக்கமளித்து பேசினார். அவர் பேசுகையில், அனைவரும் உடல்நலம், மனநலம் இரண்டிலும் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். நோய்களை கண்டறிய சுயபரிசோதனை செய்து ெகாள்ள வேண்டும். நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள, ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், என கேட்டு கொண்டார். கருத்தரங்க ஏற்பாடுகளை மகளிர் நல அமைப்பு உறுப்பினர்களான பேராசிரியைகள் முருகேஸ்வரி, சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். கருத்தரங்கில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியைகள், அலுவலர்கள் மற்றும் முதுகலை மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். விலங்கியல்துறை தலைவர் வசுமதி நன்றி கூறினார்.


Next Story